என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பி எனக்குமே அவன் தம்பி மாதிரிதான். அறிவான அழகான பையன். அவனுடன் பேசும் எல்லோருக்குமே பத்தாவது நிமிடத்தில் அவனை பிடித்துவிடும் அவ்வளவு நட்பான பையன். பிரியாக்கா என்று அவன் உரிமையாய் அழைத்து பேசும் போதெல்லாம் இவன் நிஜமாவே நம்ம கூட பிறந்து இருக்க கூடாதா என்று தோன்றும், அவன் இருக்குமிடத்தில் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே இருக்கும். ஆனால் சில மாதங்களாக அவனிடத்தில் மாற்றங்கள் காணப்பட்டது. எப்பொழுதும் கொஞ்சம் டல்லாகவே இருந்தான் படிப்பு சுமை ஜாஸ்தி என்று நினைத்தோம். மேலும் அவனுக்கு சற்று விருப்பமில்லாத பாடப்பிரிவில் சேர்த்து இருந்ததால் இப்படி இருக்கிறான் முதல் வருடம் முடியும் போது சரியாகி விடுவான் என்று நினைத்தோம். எப்பொழுது எங்கே பார்த்தாலும் இழுத்து வைத்து அரட்டை அடிப்பவன் ஒரு சின்ன புன்னகையுடன் ஒதுங்க ஆரம்பித்தான். பெரிய பையனாகி கொண்டு இருப்பதால் ஏற்பட்ட கூச்சம்தான் காரணம் என்று நினைத்தோம்.
இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு சொல்லி கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா அவன் சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் தந்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்ற பட்டுள்ளான். அவன் தற்கொலைக்கு முயற்சி செய்ததை விட அதிர்ச்சியான விஷயம் அதற்கான காரணம். அவனுக்கு போதை பொருள் உபயோகிக்கும் பழக்கமிருந்துள்ளது. அது வீட்டிற்கு தெரிய வந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளான். தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறான். சின்ன சின்ன மாற்றங்களை கண்ட போதே அவனை அழைத்து பேசியிருக்கலாம் அவனுக்கு பிடிக்காத கோர்ஸில் வலியுருத்தி சேர்க்காமல் இருந்திருக்கலாம் என்றெல்லாம் இப்பொழுது எல்லோருமே புலம்பி வருகிறோம். அவனுடைய பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் அனைவருமே அவனுடன் நண்பர்கள் போலத்தான் பழகி வந்தனர். அதீத செல்லமா ஏன் எதற்கு என கேட்காமல் அவன் கேட்ட போதேல்லாம் பணம் கொடுத்ததா அவனுக்கு ஏன் இந்த பழக்கம் வந்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். அவன் போதைக்கு உபயோகப்படுத்தியது கஞ்சா போன்ற வஸ்துக்கள் இல்லை. சாதாரணமாக நாம் வீட்டிலும் அலுவலகத்திலும் உபயோகிக்கும் ஓயிட்னர் எனப்படும் கரெக்க்ஷன் சொலியூஷன்தான், ஆனால் இது மதுவை விட கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவனுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் கூறியுள்ளார். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தனிமையை திடீரென நாடினாலோ அல்லது ஓயிட்னர் அதிகமாக வாங்குவது போல தெரிந்தால் அவர்களை கண்காணியுங்கள். தவறுகள் எங்கே வேண்டுமென்றாலும் நிகழலாம் .
புலம்பலின் காற்தடங்கள்
13 minutes ago


18 - பேர் என்ன சொல்லியிருக்காங்கன்னா:
இன்னும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைக்கவில்லையா?
என்ன கொடுமை இது
ஒயிட்னரில் போதையா.
நண்பர் விரைவில் நலம் பற வாழ்த்துகள். பழையது குறித்த குற்ற உணர்வை அதிகப்படுத்தாமல் சகஜமாகப் பழகுவது அவசியம் என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி சிறில் அலெக்ஸ்
ஆம் நாங்கள் முடிந்தவரை அவனுடன் இயல்பாகதான் பேசி வருகிறோம். ஆனால் குற்ற உணர்வினால் அவன் எங்களுடன் பேச மறுக்கிறான்
\\புகழன் said...
இன்னும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைக்கவில்லையா?
என்ன கொடுமை இது //
அது இணைய மாட்டேன்கிறது நான் என்ன செய்யறது புகழன்?
உஙகள் வலைப்பதிவை முதன் முதலாக படித்துள்ளேன். நன்றாக உள்ளது வாழ்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. இரா. ஜெயபிரகாஷ்
ஹாய் பிரியா,
Adolesent வயசுல ஒரு நல்ல வழிகாட்டி இல்லைன்னா இந்த மாதிரி ஆகறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. நான் psychiatrist இல்லை. காலேஜுக்குள் நுழைந்த சில நாட்களில் ஒரு மாதிரியான சுதந்திரம் கிடைத்த ஒரு அனுபவம் பெறுகிறார்கள். எது செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற மனோபாவம் கூட ஒரு காரணமாயிருக்கலாம். சில சமயம் inferiority complex கூட இந்த மாதிரி வாழ்க்கை திசை மாறி போவதற்குக் காரணமாயிருக்கலாம்.
உங்கள் நண்பர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்ப இறைவன் அருள் செய்ய வேண்டுகிறேன்.
விஜய்
நன்றி திரு. விஜய்
:(((((
Whitener maathiri Fevi-glue like substancesum bothaikkaaga pasanga use panraangannu kelvi patturukken... :(((
Namathu thambi viraivil gunamadaiya vaazthukkal...
நன்றி ஜி. உங்க எல்லோருடைய வாழ்த்துக்கள் மற்றும் வேண்டுதல்கள் மூலமா அவன் கண்டிப்பா இயல்பு நிலைக்கு வந்துடுவான்
ஒரு பதிவபோட்டீர்கள். அடுத்து பதிவையே காணவில்லையே.
தம்பி விரைவில் குணமடைய வாழ்த்துகள் தாரணி.
சிறில் அவர்கள் கூறியது, மிக முக்கியமான விஷயம்.அரட்டை அடித்தல், டி.வி. பார்த்தல், உணவு அருந்துதல் முதலான, குடும்ப நபர்கள் அனைவரும் ஒன்று சேரும் விஷயங்களில், 'மிக இயல்பாக' , தம்பியும் கலந்து கொள்ளும்படி, நாம் நடந்து கொள்வது மிகவும் அவசியம்.
அனைவரின் பாசமும் அன்பும் அவரை விரைவில் குணப்படுத்தும்
பணிச்சுமை சற்று அதிகம் ஜெயப்பிரகாஷ்
\\NewBee said...
தம்பி விரைவில் குணமடைய வாழ்த்துகள் தாரணி.
சிறில் அவர்கள் கூறியது, மிக முக்கியமான விஷயம்.அரட்டை அடித்தல், டி.வி. பார்த்தல், உணவு அருந்துதல் முதலான, குடும்ப நபர்கள் அனைவரும் ஒன்று சேரும் விஷயங்களில், 'மிக இயல்பாக' , தம்பியும் கலந்து கொள்ளும்படி, நாம் நடந்து கொள்வது மிகவும் அவசியம்.
அனைவரின் பாசமும் அன்பும் அவரை விரைவில் குணப்படுத்தும்//
வருகைக்கு நன்றி NewBee
இப்பொழுது பரவாயில்லை. சற்று நன்றாக பேசுகிறான். பழைய கல்லூரிக்கு செல்ல அவனுக்கு விருப்பமில்லாததால் புதிய கல்லூரியில் அவனுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளான்
உங்கள் தம்பி இப்பொழுது நலம்தானே...
naleme thamizhan
புல்லரிச்சுப்போச்சு.......இப்போ எப்படி இருக்கிறார் அந்த 'தம்பி'???
நலம்பெற....போதை பழக்கத்திலிருந்து விடுபட இறைவனை வேண்டுகிறேன்!!
I've some knowledge about how some guys get into drugs..
They say, It's difficult to refuse when you're friends tease you for not having GUTS to do drugs.
I wish your brother get well soon.
Post a Comment