நேசம் + ப்ரணவ பீடம் வழங்கும் இலவச யோகா பயிற்சி பட்டறை

ஏறக்குறைய ஒரு வருடம் ஆறு மாசம் கழிச்சு திரும்ப பதிவு பக்கம் தலைக்காட்டல். நான் திரும்ப பதிவு எழுதறது நல்ல நிகழ்வு இல்லைன்னாலும் ஒரு நல்ல விசயத்தோடு ஆரம்பிக்கலாம் அப்படின்னு ஒரு எண்ணம். கோவையில் இருக்கிற நேசம் அமைப்பு புற்று நோய் விழிப்புணர்வு முகாமுக்காக ஒரு இலவச யோகா நிகழ்ச்சி நடத்தறாங்க. இனி ஓவர் டூ விஜி



நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்

இந்தக்குறளின் வழி உள்ளிருந்து கொல்லும் நோயான புற்றுநோயை வராமல் தவிர்க்க உள்ள வழிமுறைகளை கண்டறியும் பொருட்டு நம் மருத்துவத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் இதற்கு என்ன வழி என்றும் அறிதல் பொருட்டும் ஏற்படும் விழிப்புணர்வு முகாம் கோவையில் வரும் பிப்ரவரி 5 - ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.


நேசம் அமைப்பின் முதல் நிகழ்வாக கோவையின் பிரபல பதிவர், யோகா ஆசிரியர் சுவாமி ஓம்கார் அவர்களின் ப்ரணவ பீடம் ( http://pranavapeetam.org/)
இணைந்து கோவையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.. ஆர்வமுள்ள யாரும் கலந்து கொள்ளலாம். கீழ்கண்ட எண்ணில் அல்லது நேசம் ஈமெயில் முகவரியில் உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இடவசதி கருதி முதலில் வரும் 80 பேர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதி. இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 35 முதல் 40 பேர்கள் இருப்பார்கள். முதல் பிரிவு காலையிலும் இரண்டாம் பிரிவு மாலையிலும் நடக்கும். குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. யோகா செய்ய வசதியான உடையுடன் வரவும்.
நிகழ்ச்சி நடக்கும் இடம் :

ப்ரணவ பீடம், பொன்னுரங்கம் ரோடு, ஜெயின் கோவில் எதிரில்
ஆர்.எஸ் புரம்
நேரம் : முதல் பிரிவு : காலை 9 முதல் 12 மணி வரை இரண்டாம் பிரிவு - மாலை 4 முதல் 7 மணி வரை.


தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9994108710

மின்னஞ்சல் முகவரி ; nesamgroup@gmail.com

சரியா தப்பா


இப்ப எல்லாம் வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். வர வர மட்டுமில்லாம போக போக கூட யோசிக்கிறேன். இப்ப உதாரணமா இந்த வரேன் இதை எடுத்துகோங்களேன். ஆமா வரேன் அப்படின்ற வார்த்தையை எடுக்க முடியுமா என்ன ? கேட்டுக்கோங்களேன் அப்படின்னு தானே சொல்லணும் ஆனா எடுத்துகோங்கன்னு ஏன் சொல்லறோம். மனசுல எடுத்துகோங்க அப்படிங்கறதுக்காக அப்படி இருக்குமோ? அப்ப மனசு கேட்கலைன்னு சொல்லறோமோ அது சரியா தப்பா. அது சரின்னா இது தப்பா இது சரின்னா அது தப்பா.

எல்லாமே எல்லா இடத்திலும் சரியா இருக்குமா இருக்காதுதானே. இப்ப கேட்டிங்கன்னா அவ் நீங்க எப்படி இதை கேட்க முடியும் பாக்கதானே முடியும் அதனால இப்ப பாத்திங்கன்னா இப்ப நான் உங்க வீட்டுக்கு வரேன்னு வெச்சுகோங்க நான் எங்க வீட்டுல சொல்லுவேன் நான் அவங்க வீட்டுக்கு போறேன்னு ஆனா நீங்க உங்க வீட்டில சொல்லுவிங்க பிரியா நம்ம வீட்டுக்கு வரான்னு. பாருங்க, நான் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்தலை கூட நான் போறேன்னு சொல்றேன். நீங்க வர்றா சொல்லறீங்க. ரெண்டுமே எதிரா இருந்தாலும் ரெண்டு ஸ்டேட்மெண்டுமே சரி .

இதையே நான் விஜி வீட்டுக்கு வரேன் அப்படின்னு எங்க வீட்டுல சொல்ல முடியாது. விஜி வீட்டுல பிரியா நம்ம வீட்டுக்கு போறா அப்படின்னு சொல்ல முடியாது, அதனாலதான் சொல்லறேன். எல்லாமே எப்பவுமே சரியா இருக்காது. எல்லாமே எப்பவுமே தப்பாவும் இருக்காது. தப்பான ஒரு விஷயத்தை தப்புன்னு சரியா நாம நினைச்சா அது சரியா தப்பா. நாம சரின்னு நினைக்கிறதால அது தப்பான விஷயம். ஆனா நாம சரின்னு நினைக்கிறோமோ அதனால அது சரியான தப்பான விஷயம் அப்படின்னு சொல்லலாமா.

நீங்களும் யோசிங்க ஆரம்பியுங்க. இப்படி எல்லாம் யோசிச்சா என்ன கிடைக்குமா? தஞ்சாவூர் கல்வெட்டுல நம்ம பேரும் கூடவே தலைமுடி உதிராம இருக்க ........... & கோ கம்பெனியில இருந்து மூலிகை தேங்காய் எண்ணெயும் கிடைக்கும். யோசிச்சுட்டே இருங்க. மிச்சத்தை நாளைக்கு வந்து பேசலாம் .